கேரளாவில் அட்டாகசம் செய்த அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட்ட நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தேனி மக்களை அச்சுறுத்தி வந்தது. தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்தது .
இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தது. அங்கு தயாராக இருந்த வனக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் மூன்று கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினர். 35 வயது கொண்ட இந்த யானை 12 அடி உயரம், 5600 கிலோ எடை கொண்டது.
இந்த யானையை முதுமலை யானைகள் காப்பகம் அல்லது பரம்பிக்குளம், ஆழியாறு வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட முடிவு செய்துள்ளனர். இன்று காலை லாரியில் அரிக்கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது..