லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு.
காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல்நிலை மரணத்தை தடுப்பது குறித்து மத்திய மண்டல போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். காவல்நிலைய மரணங்கள் கூடாது, போலீஸ் வன்முறையை கையாள கூடாது என முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தேவைப்படும் போது பலத்தை போலீஸ் பயன்படுத்தலாம், குற்றவாளிகள் போலீசை பார்த்து பயப்பட வேண்டும். மக்கள் தாக்கினால் தற்காத்து கொள்ள போலீசாருக்கு கராத்தே வர்ம கலைகள் கற்று தரப்பட்டுள்ளன என்றார்.
காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள், சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தேசிய மனநல பயிற்சி மையத்திலிருந்து 300 காவலர்கள் பட்டய சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களை கொண்டு காவல் நிலையில் பயிற்சி வழங்கப்படும். குற்றவாளிகளை காவலர்கள் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய டிஜிபி, தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பதிலளித்தார். மேலும், காவல்துறையில் புதிதாக 10,000 போலீசார் பணியில் சேர உள்ளதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply