கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு நாளை நடக்கிறது. 6,994 பேர் எழுதுகிறார்கள்.

கோவை மே 3 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .வருகிற கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது.மொத்தம் 6,994 பேர் எழுதுகிறார்கள் இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.கோவையைச் சேர்ந்த திருநங்கை இந்திரஜா இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத உள்ளார் .அதன் மூலம் அவர் தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை ஆவார். இதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.தேர்வு எழுதும் மையங்கள் விவரங்கள் வருமாறு:- சூலூர்பி. எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா, பாரதி பார்க் ரோடு அவிநாசிலிங்கம் கல்லூரி, அவினாசி ரோடு சி.ஐ.டி .கல்லூரி, பீளமேடு பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை அரசு கலைக்கல்லூரி, தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, ஜி என் மில்ஸ் கொங்குநாடு கல்லூரி, ராஜவீதி துணி வியாபாரிகள் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டணம் எஸ். எஸ். வி. எம். பள்ளி ஆகிய 14 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.