தமிழகம்- கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும்- மத்திய அரசு திட்டவட்டம்.!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது அணையை கட்டுவோம் என அடிக்கடி கூறி வரும் நிலையில் கூறிவரும் நிலையில், கர்நாடகா அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே சுமுக முடிவு இதுவரை எட்டப்படவில்லை. இரண்டு மாநிலமுமே முரண்பாடான கருத்துக்களோடு தான் இருந்து வருகிறது.

இதனையடுத்து, இன்று இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்பி அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.