காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது-பிரதமர் மோடி பேச்சு..!

காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி பேச்சு.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை மீதான விவாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடைபெற்றது.

அந்த வகையில் இன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத் து. வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது.

காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் விமர்சித்து பேசியுள்ளார்.