நகைப் பட்டறையில் தங்க பிஸ்கட் திருடியவர் கைது-பட்டப்பகலில் துணிகரம்..!

கோவையில் உள்ள நாடார் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 27) இவர் அங்குள்ள தனது மாமா நகைப் பட்டறையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பட்டறை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஒரு நபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 8 கிராம் எடை கொண்ட ஒரு தங்க பிஸ்கட்டை திருடி கொண்டு வெளியே வந்தார் .இதை பார்த்த அரவிந்த் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் சப் இன்ஸ்பெக்டர் கோமதி அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த நாகராஜ் என்ற அட்டகத்தி நாகராஜ் (வயது 47) என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் மீது ஏற்கனவே 3 காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது.