தண்டனை அறிவிக்கப்பட்டதும் கோர்ட்டில் இருந்து தப்பி ஓடியவர் கைது.

கோவை மே 2 கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 2006- ஆம் ஆண்டு வியாபாரி மகேஷ் என்பவரை கத்தியால் குத்தி ரு.1லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . இந்த வழக்கில் செந்தில்குமார் ( வயது 39 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கில் கைதான 3 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் ஜாமினீல் வெளியேவந்து தலைமறைவானார். இதனால் செந்தில்குமார் மட்டும் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதற்கிடையில் இந்த வழிப்பறி வழக்கில் கடந்த 28 -ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதில் செந்தில் குமாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை கேட்டதும் செந்தில்குமார் கோர்ட்டில் இருந்து நைசாக தப்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து அவரை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செந்தில்குமார் செல்போனில் சிக்னல் மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகிரி பகுதியில் பதுங்கி இருந்த செந்தில் குமாரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் .பின்னர் அவர் கோவைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கோர்ட்டில் இருந்து தப்பி ஓடியவரை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரைமாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார்.