சென்னை ஐஐடியில் 100-ஐ கடந்த கொரோனா தொற்று-பதற்றத்தில் மாணவர்கள்.!!

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மீதம் 109 பேரில் ஒருசிலருக்கு இனைநோய் பிரச்சனைகள் உள்ளன என்றும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை என தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது என்றும் குறிப்பிட்டார்.