ஆட்டோவுக்கு தீ வைத்த டிரைவர் கைது..!

கோவை குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 49) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சகிலா (வயது 40) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர் . அன்சர் அலி ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் சகிலா தனது 2 மகள்களுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சகிலாவும் அவரது பெற்றோர்களும் கடன் வாங்கி ஒரு ஆட்டோ வாங்கினார்கள்.நேற்று இரவு அவருடைய வீட்டின் முன் நிறுத்தி இருந்த அந்த ஆட்டோவை கணவர் அன்சர் அலி தீ வைத்து விட்டார். இதில் ஆட்டோ எரிந்து நாசமானது. இது குறித்து மனைவி சகிலா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து கணவர் அன்சர் அலியை கைது செய்தார்..