6 ரஷ்ய போர்க் கப்பல்கள் ஐரோப்பாவை நோக்கி பயணம் -ஆதாரத்துடன் வெளியிட்ட ஜப்பான் ராணுவம்.!!

பெரிய ரஷ்ய போர்க் கப்பல்கள் அதன் தீவுகளுக்கு அருகாமையில் பயணிப்பதைக் கண்டதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ராணுவ வாகனங்களுடன் ரஷ்ய போர்க் கப்பல்கள் பயணிக்கும் படங்களை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய தற்காப்புப் படையின் கடல் ரோந்து பிரிவினர், செவ்வாயன்று ரஷ்ய கப்பல்களை முதன்முதலில் பார்த்துள்ளனர். பின் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

சுமார் 6 கப்பல்கள் மேற்கே நோக்கி, அதாவது ஐரோப்பாவை நோக்கிய பயணித்ததாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த தகவலில், அந்த கப்பல்கள் எங்கு செல்கின்றன என எங்களுக்கு தெரியவில்லை.

ஆனால், அவை ஐரோப்பாவை நோக்கி செல்ல சாத்தியமிருக்கிறது. உக்ரைனுக்கு செல்லவும் சாத்தியமிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய எல்லைக்கு மிக அருகில் உள்ள ஜலசந்தி வழியாக ரஷ்ய கப்பல்கள் செல்வது வழக்கத்திற்கு மாறானது என செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.