மகளுடன் ஊர் சுற்றிய காதலனை கத்தியால் குத்திய தந்தை உள்பட நண்பர்கள் இரண்டு பேர் கைது..!

கோவை கவுண்டபாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் இவர் பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி மாணவி பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இது பற்றி மாணவியின் தந்தை கார்த்திகேயனுக்கு பள்ளியிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி அவர் விசாரித்த போது தனது மகள் பள்ளிக்குச் செல்லாமல் தனது காதலன் பிரேம்குமார் உடன் ஊர் சுற்றி வருவது தெரிய வந்தது. இது பற்றி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த மாணவி மற்றும் பிரேம்குமார் அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர். இதை அடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை மேலும் பிரேம்குமார் மீது மாணவியின் தந்தை கார்த்திகேயன் ஆத்திரமடைந்தார். இதனால் அவர் பிரேம்குமாரை தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.பிரத்தில் உள்ள தியேட்டர் அருகே வருமாறு அழைத்தார். அதை ஏற்று பிரேம்குமார் தனியாக சென்றதும். அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் தனது நண்பர்கள் சரவணன், மணி ஆகியோருடன் சேர்ந்து பிரேம்குமாரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் அக்கம் பக்கத்தில் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் கொலை முயற்சி எஸ்.சி.எஸ்.டி உள்ளிட்ட பிரிவுகளில் கார்த்திகேயன், சரவணன், மணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், சரவணன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணியை தேடி வருகின்றனர்.