கோவை பாரதியார் ரோடு ஸ்ரீராமபுரத்தில் பொது கழிப்பறை உள்ளது. இங்குள்ள
ஒரு கழிபறையில் நேற்று ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் இதுகுறித்து
ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில்
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். பின்னர்
பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த
சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது
குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை..

Leave a Reply