கோவை நர்ஸ் திடீர் மாயம்..!

கோவை: தஞ்சாவூர் ,வடக்கு வாசல்,காசி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி , இவரது மகள் தீனா சாலினி ( வயது 22) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 18ஆம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை . எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தாயார் பர்வீன் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.