கோவை பெண் பல் டாக்டரிடம் தாலி செயின் பறிப்பு- மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பீளமேடு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் என்பவரின் மனைவி ரேவதி (48). பல் டாக்டரான இவர் நேற்று மாலை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயின் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் .இதை அடுத்து ரேவதி சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.