கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா, இவரது மனைவி பிரியங்கா ( வயது 29)இவர் நேற்றுகாந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்,பங்கஜா மில் ரோட்டில் பஸ்சிலிருந்து இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 5கிராம் தங்க செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து பிரியங்கா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச் செயின் திருட்டு…








