கோவையில் பயங்கரம்… உருட்டுகட்டையால் தாக்கி கணவர் படுகொலை – மனைவிக்கு வலைவீச்சு..! கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 75)கூலித் தொழிலாளி.இவர் நேற்று அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து புலியகுளம்கிராம நிர்வாக அதிகாரி பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார், இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில்லோகநாதன் குடிப்பழக்கம் உடையவர் என்பதும் அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி தெய்வானை அவரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது இது தொடர்பாக தெய்வானை மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவையில் பயங்கரம்… உருட்டுகட்டையால் தாக்கி கணவர் படுகொலை – மனைவிக்கு வலைவீச்சு..!
