இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி..

கோவை குனியமுத்தூரில் உள்ள நஞ்சப்ப கவுண்டர் விதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி.இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 25 )இவர் மருதமலை -வடவள்ளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் . பாரதியார் பல்கலைக்கழகம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறு கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து இவரது தந்தை அக்பர் அலி வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.