சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்,சூலூர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, பள்ளி கவுன்சிலர் பிரதிநிதி கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், கௌதமன் முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் பசுமை நிழல் விஜயகுமார், முன்னாள் மாணவர்கள் கட்டுமரம் சசிகுமார், அரிமா சிவகுமார், விஜயகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர் பள்ளியின் மாணவர் வெற்றிச்செல்வன் ஆசிரியர்களைப் பற்றி கவிதை வாசித்து சிறப்பித்தான் தொடர்ந்து பள்ளியின் அனைத்து இருபால் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின விழா சிறப்பு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது இந்நிலையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசீலா நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு சிறப்பு விருந்தினர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் வாழ்த்துக்களை கூறினார்கள் இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பிரதிநிதி ஞானசுந்தரி, பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிர்வேல் நிகழ்வினை ஏற்பாடுகளை செய்து நன்றி கூறினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Leave a Reply