சூலூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி..!

தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 823.09 கோடி செலவில் 16 லட்சத்து 73,274 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டில் ரூ. 264.10 கோடி செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 லட்சத்து 47,676 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது . அதன் ஒரு பகுதியாக சூலூர் பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கீதா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலி ஆகியோர் முன்னிலையில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்கள் மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி துணை தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மாவட்ட கல்வி பொறுப்பு அலுவலர் , ஆசிரியர் பாபு, நாட்டு நல பணி திட்ட அலுவலர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 156மாணவர்களுக்கு ம் 160 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது..