சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்பு.!

சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், கடந்த தமிழ் புத்தாண்டு அன்று தேநீர் விருந்தளித்தார். ஆனால் நீட் மசோதாவை ஆளுநர் பல நாட்களாக கிடப்பில் போட்டிருப்பதை சுட்டிக்காடி, முதல்வரும் அமைச்சர்களும் அதில் பங்கேற்க்கவில்லை. மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் அந்த தேநீர் விருந்தை புறக்கணித்தன.

நேற்று , சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திரை பிரபலங்கள், ஓ.பன்னீர்செல்வம், தாமாக. தலைவர் ஜீ.கே.வாசன், திமுக தோழமை கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் பங்கேற்றுள்ளன.