வாழ பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “சிறந்த கலாச்சாரம் பண்பாடு கொண்ட அழகான மாநிலம் கோவா. கோவாவில் தான் பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கோவா மக்கள் 17-18-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர் ஆட்சியில் மிகவும் துன்பப்பட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கோவா மக்கள் போர்ச்சுகீசிய அரசால் மிகவும் கஷ்டத்த அனுபவித்தனர். சிறந்த கலாச்சாரம் கொண்ட நாடு இந்தியா.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் . இந்த வளர்ச்சியில் கோவாவின் பங்களிப்பும் இருக்கும். இந்தியா என்பது ஆன்மீகம் கலாச்சாரம் கொண்ட நாடு. சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் குஜராத் மற்றும் மராட்டிய மாநில தினங்கள் கொண்டாடப்பட்டது. குஜராத்தை சேர்ந்த சௌராஷ்ட்ரா மக்கள் தமிழகத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதேபோல் மராட்டியவை சேர்ந்த மராட்டிய மக்களும் தமிழகத்தில் அதிகமானோர் வசித்து வருகின்றார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தமிழகத்துக்கு கல்விக்காகவும் தொழில் நடத்துவதற்காகவும் வருகின்றனர். இவர்கள் தமிழகத்தை தாய் மாநிலமாகவே கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால் இங்கு வருகின்றனர்” என தெரிவித்தார்.