தமிழக பட்ஜெட்: சிறு,குறு தொழில் நிறுவனங்களுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை.!!

தமிழக பட்ஜெட் தொடர்பாக சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை.

2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி,இன்று காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை,சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து,சென்னை தலைமைச் செயலகத்தில் 2 .30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் ஆலோசனை மேற்கொள்கிறார்.