சமூக நீதியை பத்தி பேசிட்டு திருமாவளவன் போட்டோவை கோவை மண்டலத்தில் ஏன் போடவில்லை?” தி.மு.க’விற்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது, “கோவை மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு எல்லா தலைவர்கள் படத்தையும் போட்டீங்க! எங்க அண்ணன் திருமாவளவன் படத்தை போட்டிங்களா? அவரோடு சிதம்பரத்தில் ஓட்டு கேட்க மட்டும் தான் யூஸ் பண்ணிட்டீங்க வடமாவட்டங்களில் திருமாவளவன ஓட்டு வங்கிக்காக உபயோகப்படுத்திட்டு எதுக்கு பக்கம் பக்கமா சமூகநீதி பேசுறீங்க? சமூகநீதி பத்தி பேசறதுககு உங்களுக்கு எந்த ஒரு வித உரிமையும் கிடையாது” என்றார்.
மேலும் பேசிய அவர், “எல்லா கட்சிக் கொடியும் இருக்கும்பொழுது விடுதலை சிறுத்தை கொடியை மட்டும் ஏறி வெட்டி விட்டீர்களே! அதுக்கு ஆதாரம் எங்கிட்ட இருக்கு. சமூகநீதி என்றது வார்த்தை இல்லை செயல், சும்மா வாயால பேசிட்டு போறதில்லை, செயலில் காமிக்கணும். செயல் அரசியல் தி.மு.க’விடம் சுத்தமாக கிடையாது விளம்பர அரசியல், செய்தி அரசியல்தான் இதைத்தான் தி.மு.க செய்கிறது” என்றார் சீமான்.
Leave a Reply