அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் 3 நாட்கள் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோட்டயம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில், அம்மாநிலத்தில் கனமழை நீடித்து வருவதால், வயநாடு, இடுக்கி, கோட்டயம், திருச்சூர், பத்தனம்திட்டா, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 8 பேர் பலியானதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு 8 பேர் காணாமல் போனதாகவும் அம்மநில முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.







