தஞ்சை பெரிய கோவில் நந்தி சிலையில் திடீர் விரிசல் – அதிர்ச்சியில் பக்தர்கள்.!!

லக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக தஞ்சை பெருவுடையார் கோயில் விளங்குகிறது. பெருவுடையார் கோயிலின் சிறப்பை கண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெருவுடையார் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து பராமரித்து வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை அமைந்துள்ளது. இந்த நந்தி பெருமான் சிலையில் நேற்று திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நந்தி பெருமான் சிலையில் ஏற்பட்ட விரிசலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒவ்வொரு மாதமும் இரு முறை பிரதோஷ வழிபாடு நடக்கும் நந்தி சிலையில் ஏற்பட்ட விரிசல்களை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.