பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

சென்னை: பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை குருநானக் கல்லூரி பொன்விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்றார். கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார்.