ஸ்டாலின் திறந்து வைக்கும் “தமிழ்நாடு அரங்கு”… துபாயில் மாஸ் காட்டும் தமிழக முதல்வர்.!!

துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை இன்று திறந்து வைக்கவுள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அவரை துபாய்க்கான இந்திய துணைத்தூதர் அமன்பூரி வரவேற்றார். மேலும் அந்நாட்டு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் துபாயில் வாழும் தமிழர்களும் அவரை வரவேற்றனர்.

முதலமைச்சர் தலைமையிலான இக் குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின், அவர்களுடன் இரவு விருந்து உட்கொண்டார். இந்நிலையில் சர்வதேச தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு அரங்கை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.