மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் பலத்த மழைக்கான ‘எல்லோ அலெர்ட்’டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவ மழை தற்போது தான் தீவிரமடைந்து பல பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘எல்லோ அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.இடுக்கி மாவட்டத்தில் இரு நாட்களாக பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. தொடுபுழா உட்பட சமதள பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் மூணாறு, அடிமாலி உள்ளிட்ட மலையோரப்பகுதிகளில் பகலில் விட்டு விட்டு மழை பெய்தது.
Leave a Reply