விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்… உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு – ரூ.9000 முதல் ரூ.15,000 வரை அதிகரிப்பு.!!

சென்னை : ரம்ஜான் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் வெளியூர் செல்வதால் சென்னை விமான உள்நாட்டு நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமான விமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,675 ஆக இருந்தது. ஆனால் இது தற்போது ரூ.11,000 முதல் ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது. அதே போல் சென்னை – மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,419ல் இருந்து ரூ. 10,000 முதல் ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டின் கட்டணம் ரூ.2,768ல் இருந்து ரூ. 9,000 முதல் ரூ.13,000 வரை அதிகரித்துள்ளது. சென்னை – கோவை இடையேயான விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,313ல் இருந்து ரூ.5,500 முதல் ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது. மேலும் சென்னை – டெல்லி விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,973ல் இருந்து ரூ. 8,500 முதல் ரூ.10,000வரையும் சென்னை – கொல்கத்தா விமான டிக்கெட் கட்டணம் ரூ. 5,309ல் இருந்து ரூ.9,000 முதல் ரூ.15,000 வரையும் உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்வால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.