விமான பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… உள்நாட்டு விமான கட்டணம் ரூ.1000 வரை உயர்வு..!!

விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று முதல் விமான கட்டணத்தை ரூ. 300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டண உயர்வு முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ. 300 ,501 கி.மீ – 1000 கிலோ மீட்டர் வரை ரூ. 400, 1001- 1500 கி.மீட்டர் வரை ரூ. 550, 1501 -2500 கி.மீட்டர் வரை ரூ. 650, 2501-3500 கி.மீட்டர் வரை ரூ. 800, 3500 கி.மீட்டருக்கு மேல் ரூ. 1000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான டிக்கெட் கூடுதல் கட்டணம் உயர்வை முன்னிட்டு, மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.