சபரிமலை நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று தொடங்குகின்றன.

இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நடையை திறந்தார்.

நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். நேற்று நடை திறப்பை முன்னிட்டு தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.