குடமுழுக்கு கோலாகலம்- பக்தியில் திளைத்த மதுரை!”

லகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (17-09-26) கோலகலமாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கான திருப்பணிகளை கடந்த 1 மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முதலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 7 புண்ணிய நதிகள், கங்கையில் இருந்து எடுத்து வரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.

7:55 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு குடமுழுக்கு, 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு மஹா குடமுழுக்கு நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், 17 ஆண்டுகள் கழித்து இன்று நடைபெற்றதால் அதனை காண மாசி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலென குவிந்திருந்தனர்.

குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் பொது தரிசனத்திற்கு கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவர். மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனத்திற்கு பிறகு கிழக்கு கோபுரம் வழியாக வெளியே செல்லப்படுவர்..