13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை..

கோவை அருகே உள்ள வடவள்ளி, பாலாஜி பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோபால். இவரது 13 வயது மகள் . 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறகு பள்ளிக்கு செல்லவில்லை.இவரது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை. இதற்காக நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார். தந்தையும் வெளியே போயிருந்தார் .இந்த நிலையில் வீட்டில்  தனியாக இருந்த 13 வயது சிறுமி சாணி பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தந்தை கோபால் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.