கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 8 பேரிடம் ரூ 33 லட்சம் மோசடி..!

கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32) விமானம் மற்றும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒண்டிப்புதூர் பிரபு (வயது 42) ஜேம்ஸ் (வயது 39) ஆகியோர் அறிமுகமானார்கள். அவரிடம் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதை விட வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை எங்களிடம் அழைத்து வந்தால் குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் கொடுப்பதாக கூறியுள்ளனர் . இதை நம்பிய நாகராஜன் சொந்த ஊரிலிருந்து அதிகமாக சம்பாதிக்கலாம் என்று கருதினார். இதை தொடர்ந்து அவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பிய 8 பேரைபிரபு ,ஜேம்ஸ், அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் அந்த 8 பேரிடமிருந்து வசூலித்த ரூ. 33 லட்சத்து 20 ஆயிரத்து பிரபு ,ஜேம்ஸ் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த 8 பேருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜ் இராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் பிரபு ,ஜேம்ஸ், ஆகியோர் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..