கோவையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.32, 700 அபராதம் வசூல்..!!

கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது.
உயர தொடங்கியது
இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு பின் கோவை இருந்து வந்தது.
அதிலும், கோவை மாவட்டத்தில், மாநகரப் பகுதிகளில்தான் கொரோனா பாதிப்பு பெருமளவில் காணப்பட்டது. கடந்த 2-ந் தேதி 701 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது.
அது மேல்ல மேல்ல உயர தொடங்கியது. நேற்று 118 பேருக்கு தொற்றுக்கு உறுதியானது. இதன் காரணமாக கோவையில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் ெகாரோனா பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் படி மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படுகிறது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.6 ஆயிரத்து 700 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மால்கள் உள்ளிட்ட இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி இதுவரை ரூ.32 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் தொற்று மேலும் கூடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.