கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர்அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவைக்கு வந்த அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அவர்களில் 11 பேர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டனர். அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது காலணியிலும், ஜீன்ஸ் பேண்டிலும் மொத்தம் 6.62 கிலோ எடை கொண்ட தங்கம். தங்க செயின்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3.8 கோடி இருக்கும். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜுனன் (வயது 43) என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது..
கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- பயணி ஒருவர் கைது..!
