கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 46). அந்தப் பகுதியில் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது ரூ. 25 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஊழியர்கள் ரம்யா ,ஜெயக்குமார் சுப்புலட்சுமி ஆகியோர் மீது குமார் புகார் செய்தார். விசாரணையில். இவர்கள் தொழிற்சாலைக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்து மேனேஜர் சக்திவேலின் வங்கி கணக்கில் போட்டு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, ரம்யா,சுப்புலட்சுமி ஆகியோர் மீது மோசடி உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு தேடி வருகிறார்கள்..