கோவை ஆர். எஸ். புரம் லிங்கப்ப செட்டி வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் கோழிக்கோடு பாலுசேரியை சேர்ந்த பெனிஸ் என்பவர் அறிமுகமானார். இவர் பழைய கார் வியாபாரம் செய்து வருகிறார். இவர் விஜயகுமாரிடம் கார் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வாரத்தை காட்டினார் .இதை நம்பி விஜயகுமார் பெனிசிடம் வங்கி மூலம் ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தார். இந்த பணத்தை பெற்றுக் கொண்டு கார் வாங்காமலும், தொழில் செய்யாமலும் பெனிஸ் மோசடி செய்து விட்டார் .இது குறித்து விஜயகுமார் ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை நூல் வியாபாரியிடம் ரூ.18 லட்சம் நூதன மோசடி.!!
