கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் ஜாமினில் விடு விப்பு – போலீஸ் துணை கமிஷனர் சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல் திணறல்.!!

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 40 .இவர் உயிரோடு இருக்கும்போது கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார். மதுரவாயில் மேம்பாலம் அருகே ராஜ்குமார் 200 அடி சாலை அருகே ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது இரவு 8:00 மணி அப்போது மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ரிஸ்வான் வயது 38 ராஜ்குமாரை விசாரித்துள்ளார் . இந்த விசாரணையில் ரிஸ்வானுக்கும் ராஜ்குமாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது . ரிஸ்வான் ராஜ்குமாரை உயிர் போகும் அளவிற்கு அடித்து உதைத்துள்ளார் . இதில் ராஜ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜ்குமார் இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர் . இது பற்றி தகவல் அறிந்த ராஜ்குமாரின் உறவினர்கள் ரிஸ்வான் தாக்கி ராஜ்குமார் இறந்துவிட்டார் என புகார் கூறியுள்ளனர் . இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து ரிஸ் வானை கைது செய்தனர் . கைதுக்கு பின்பு ரிஸ்வானை ஜாமினியில் விடுவிக்கப்பட்டார். ரிஸ்வான் ஜமீனில் விடுவிக்க கப்பட்டதை கேள்விப்பட்ட பொதுமக்கள் போலீசுக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் கொலை குற்றவாளிக்கு உடனடி ஜாமினா கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் உமையாளுக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தெரியவில்லை ஆண்டவன் இருக்கின்றான் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் தண்டனை நிச்சயம் உண்டு என மண்ணை வாரி தூற்றினார்..