பெட்ரோல் பங்கில் ரூ 1.91லட்சம் பணம் திருட்டு.

ஏப்3 கோவை உப்பிலிபாளையத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு பீரோவில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 91 ஆயிரத்தை காணவில்லை.இதுகுறித்து அதன் மேனேஜர் ஜெய்சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..இந்த பணத்தை அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் திருடி சென்றிருப்பதாக தெரியவந்தது. அவரை தேடி போலீசார் திண்டுக்கல் விரைந்து உள்ளனர்.