கோவை கடைவீதி பக்கம் உள்ள முத்து விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அர்ஜுன் கதம் (வயது 36) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர் . நிறுவனத்தில் வரவு – செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது 3 கிலோ எடை கொண்ட தங்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் இருக்கும். இதை 4 ஊழியர்களும் சேர்ந்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அதன் உரிமையாளர் அர்ஜுன் கதம் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அன்கித் சூர்யவன்சி,தூசர் பவர், சன்கீத் பன்சல், பாண்டுரங்கன் ஆகியோரை தேடி வருகிறார்கள்..
ரூ.1.5 கோடி தங்கம் மோசடி- ஊழியர்கள் 4 பேருக்கு வலைவீச்சு.!!
