குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம் 

குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம் 

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். இந்த நிலையில் கோவையில் பல இடங்களில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி ஹோட்டலின் கிளை ஹோட்டல் கோவை ஜி.என் மில் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வாடிக்கையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்கு சென்று கிரில் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அதனை வீட்டுக்கு சென்று சாப்பிட எடுக்கும் போது அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. மேலும் சிக்கன் கடினமாக இருந்து உள்ளது. இதை அடுத்து மீண்டும் அந்த ஹோட்டலுக்கு சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அங்கிருந்த மேலாளர் சிறிது தவறு நடந்து விட்டதாகவும் அதை பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியு உள்ளார். ஹோட்டலுக்குள் சென்று குளிர்சாதன பெட்டியை திறந்து காட்டுமாறு கூறி உள்ளார். ஏராளமான குளிர்சாதன பெட்டிகளில் சிக்கன்களை அடுக்கி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து மேலாளர் இடம் கேட்டபோது இங்கிருந்து பத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு அனுப்புவதற்காக வைத்து உள்ளதாக கூறுகின்றார். இதையும் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என வாடிக்கையாளர் கேள்வி எழுப்புகிறார். இந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்று ஹோட்டல்களுக்கு சென்று உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது