வீட்டின் மீது சரிந்து விழும் பாறைகள்: கோவையில் உயிர் பயத்தில் வாழும் மக்கள்…

வீட்டின் மீது சரிந்து விழும் பாறைகள்: கோவையில் உயிர் பயத்தில் வாழும் மக்கள்…

கோவை மதுக்கரை மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறுகிறார் வசந்தகுமாரி. மதுக்கரை மலை மீது உள்ள பல்வேறு வீடுகளில் இவரது வீடும் ஒன்று. இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் பாறைகளை ஒட்டி கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் வசந்தகுமாரியின் வீட்டின் மீது கடந்த 22.10.22 அன்று வீட்டின் அருகில் இருந்த மிகப்பெரிய பாறை ஒன்று சரிந்து சுற்றுச் சுவரை சேதப்படுத்தியுள்ளது. பாறை இவரது வீட்டின் பெரும்பான்மையான பகுதியில் சாய்ந்த படி உள்ளதாக தெரிகிறது. பாறை சரிந்தது தொடர்பாக வனத்துறை, வட்டாச்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை என வசந்தகுமாரி குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர் அச்சத்துடன் கடந்த 22_10_22 அன்று உயிர் பாதுகாப்பு கோரியும் வீட்டின் மீது விழும் பாறையை அப்புறப்படுத்த வேண்டியும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர். இந்த நிலையில் உயிரிழப்பு போன்ற பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.