இனி வரும் காலங்களில் அணிவகுப்பு, பேரணிகள் நடத்த முன்வைப்பு பணம் பெற வேண்டும்…

சென்னை: இனிவரும் காலங்களில் அணிவகுப்பு மற்றும் பேரணிகள் நடத்தும்போது அதில் பேனர்கள் மற்றும் பதாகைகளை எடுத்துச் செல்வதாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருந்து முன்வைப்புத் தொகையை பெற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு போலீஸார் நிபந்தனையுடன் அனுமதி வழங்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனுமதி வழங்காததை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிஜி.ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு,பேரணிக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும், நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றும் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதையேற்று இந்த அவமதிப்பு வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது. அதேபோல இனி வரும் காலங்களில் அணிவகுப்பு மற்றும் பேரணிகள் நடத்தும்போதுபேனர்கள் மற்றும் பதாகைகள் எடுத்துச்செல்வதாக இருந்தால்அதற்கான முன் வைப்புத்தொகையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருந்து அரசு பெற வேண்டும். ஏதேனும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால்அந்த தொகையை அரசுதிருப்பி வழங்கக்கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.