பம்ப்செட், கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்..!

சென்னை: பம்ப்செட், கிரைண்டர் மீதான வரி உயர்வு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெட் கிரைண்டர், விவசாய பம்ப்செட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் என்றும் வெட் கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி 18% உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.