வாகன ஓட்டிகளே எச்சரிக்கை… இனி இதுவும் கட்டாயம்.. புதிய அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு.!!

சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 25, பிப்ரவரி 2022 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப் படுவதாகவும், சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அளிப்பது, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், இழப்பீடு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுதல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண் இடம்பெற செய்வதும் இந்த அறிவிக்கையின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.