புலிகள் காப்பகத்தில் ரீல்ஸ் : வன்னியரசு மீது பாய்ந்தது வழக்கு

பந்​திப்​பூர் புலிகள் காப்​பகத்​தில் அமைச்​சர் வன்​னியரசு காட்டு யானைக்கு மிகவும் அரு​கில் சென்​றது தொடர்​பாக விசா​ரணை நடத்த கர்​நாடக அமைச்​சர் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சமூக நீதித்​துறை அமைச்​சர் வன்​னியரசு, முது​மலை மற்​றும் கர்​நாடக மாநிலத்​தின் பந்​திப்​பூர் புலிகள் காப்​பகங்​களில் குடும்​பத்​துடன் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அப்போது, புதர் மறைவில் இருந்த புலியை நெருங்​கிச் சென்​றதாகவும், பந்​திப்​பூர் வனப்​பகுதி​யில் காட்டு யானைக்கு மிக அரு​கில் சபாரி வாக​னம் கொண்டு செல்​லப்​பட்​ட​தாகவும் வீடியோக்​களில் இடம்​பெற்​றிருந்​தது.

இந்த காட்​சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் மற்​றும் வன உயி​ரின பாது​காப்பு அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மேலும், அமைச்​சர் மீது நட​வடிக்கை எடுக்​கக் கோரி தேசிய புலிகள் பாது​காப்பு ஆணை​யத்​திற்​கும் புகார்​கள் அளிக்​கப்​பட்​டன. இதனையடுத்து, பந்​திப்​பூர் புலிகள் காப்​பகத்​தில் அமைச்​சர் வன்​னியரசுவின் நட​வடிக்​கைகள் குறித்து முழு​மையான விசா​ரணை நடத்த கர்​நாடக வனத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

இது​குறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “யானைக்கு அரு​கில் செல்​லும் வாக​னத்​தின் எண் வீடியோ காட்​சிகளில் தெளிவாக பதிவாகி​யுள்​ளது. வன விலங்கு பாது​காப்பு விதி​முறைகள் மீறப்​பட்​டுள்​ளதா என்​பது குறித்து விசா​ரணை நடத்த அதி​காரி​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. யார் எந்த பத​வி​யில் இருந்​தா​லும் வனத்​துறை விதி​முறைகளை கட்​டாயம் பின்​பற்ற வேண்​டும்” என்​றார்.