சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ். பாபு (75) உடல்நலக் குறைவால் நவம்பர் 19 பிற்பகல் 2.24 மணியளவில் காலமானார்.
மூச்சுத்திணறல் மற்றும் நீடித்த நுரையீரல் தொற்று காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும், இன்று பிற்பகல் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ். பாபு, 2011 வரை வட சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து பணியாற்றிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகப் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து 2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 82,997 வாக்குகள் பெற்று, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலினை வென்று தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்தார்.
முதல்வர் விஜய் இரங்கல்: வி.எஸ். பாபுவின் மறைவுக்குத் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில்,
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் இரங்கல்:பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் என்று செய்திகள் வெளியான நிலையில் திடீர் மறைவு அதிர்ச்சி தருகிறது. வி.எஸ். பாபுவை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்:கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
உதயநிதி ஸ்டாலின்:நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள், இயற்கையினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.70 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்:மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இயக்கத்திற்கும் குடும்பத்திற்கும் எனது ஆறுதல்” எனக் குறிப்பிட்டுள்ளார்
பிரேமலதா விஜயகாந்த்:உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார்:அண்ணன் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வி.எஸ். பாபு மறைவுச் செய்தி அறிந்ததும் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அண்ணாநகர் துணை ஆணையர் அர்பிதா ராஜ்குப்த் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அப்போது செய்தியாளார்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா,
கடினமான காலகட்டங்களில் கூட அவர் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார்; மக்கள் விரும்பக்கூடிய ஒரு தலைவராக அவர் இருந்தார்; அவரது இழப்பு குடும்ப இழப்பு அல்ல.. ஒரு கட்சியின் இழப்பு அல்ல; ஒட்டுமொத்த வடசென்னை மக்களுக்கு முக்கிய இழப்பு” என்று தெரிவித்தார்.வி.எஸ். பாபு மறைவையொட்டி திருச்சியில் நடைபெறவிருந்த முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







