டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி என்பவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார்.
இயற்கை வளங்கள், காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுவாழ் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மனிதர்கள் பல ஆபத்துக்களை சந்திப்பதும் நடக்கிறது. பூமியில் இவ்வளவு அழிவுகள் நடந்தாலும் இயற்கையின் மீதும், பறவை விலங்கினங்கள் மீதும் பரிவு காட்டும் வெகுசில நபர்கள் இருக்க தான் செய்கின்றனர். அப்படி ஒரு நபர் தான் டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி.
இவர் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். பறவைகளுக்காக கூடுகள் கட்டுவதை சிறுவயது முதலே பழக்கப்படுத்திக் கொண்டார். சணல், புல், பிளாஸ்டிக், மரம் போன்றவை கொண்டு அவர் கூடுகளைக் கட்டுகிறார்.
Leave a Reply