புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இறுதி ஊர்வலம்- ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடை பயிற்சி சென்றபோது மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிர் இழந்தது . சுமார் 25 ஆண்டுகளாக மணக்குள விநாயகர் கோவிலில் வளர்க்கப்பட்ட இந்த யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது காலை முதலே யானை லட்சுமி உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர் பலர் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது தொடர்ந்து யானை லட்சுமி உடலை அடக்கம் செய்வதற்காக வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு மணக்குள விநாயகர் கோவில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு நேரு வீதி அண்ணா சாலை கடலூர் ரோடு வழியாக இறுதி ஊர்வலம் சென்றது மணக்குள விநாயகர் கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் மட்டும் இன்றி புதுச்சேரி மக்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு யானை லட்சுமிக்கு பிரியா விடை கொடுத்தனர்